இமான்-சித்ஶ்ரீராம் காம்போ - லவ்வர்ஸ் டே அன்னிக்கு லவ் சிங்கிள் ஓகே, ஆனா இது அதுக்கும் மேல!
முகப்பு > சினிமா செய்திகள்காதலர் தினத்தன்று டெடி படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகவுள்ளது.

ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டெடி. மிருதன், டிக்டிக்டிக் படங்களை இயக்கிய ஷக்தி சவுந்தர்ராஜன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இமான் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். நடிகையும் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில் டெடி படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் வரும் காதலர் தினத்தன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனிமையே எனும் இப்பாடலை இமான் இசையமைக்க, சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். காதலர் தினத்தன்று சிங்கிள் பசங்களுக்கு டெடிகேட் செய்யும் விதமாக இந்த பாடலை படக்குழு வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
One of the best album in a long time for me ##Teddy Thank u so much @immancomposer sir for the lovely melodies 😍😍🤗#TeddyFirstSingle #Thanimaye On Valentine’s Day for all the singles 🤪🤪 @ShaktiRajan @sayyeshaa @sidsriram @madhankarky @StudioGreen2 @thinkmusicindia @K9Studioz pic.twitter.com/f5anCIpv77
— Arya (@arya_offl) February 12, 2020