வானம் கொட்டட்டும் படத்தில் இருந்து ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வானம் கொட்டட்டும். அவரின் உதவியாளர் தனா இயக்கும் இத்திரைப்படத்தில், சரத்குமார், ராதிகா, மடோன்னா செபாஸ்டின், ஐஷ்வர்யா ராஜேஷ், விக்ரம் பிரபு, சாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் முதல் முறையாக பாடகர் சித் ஶ்ரீராம் இசையமைப்பாளர் ஆகியுள்ளார்.
இந்நிலையில் வானம் கொட்டட்டும் படத்தில் இருந்து ஸ்னீக் பீக் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அமிதாஷ் சிகரெட் அடித்து கொண்டிருக்க, அங்கு வரும் ஐஷ்வர்யா ராஜேஷ், 'திருட்டு தம்முல ஒரு தனி சுகம்ல' என பேசுவது போன்ற காட்சி இப்போது வெளியாகியுள்ளது. வானம் கொட்டட்டும் திரைப்படம் நாளை முதல் வெளியாகவுள்ளது.
'திருட்டு தம்முல ஒரு தனி சுகம்'... வானம் கொட்டட்டும் ஐஷ்வர்யா ராஜேஷ்! வீடியோ