சூர்யாவுக்கு Birthday Wish சொன்ன சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் சின்ன தல!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 23, 2019 01:37 PM
பிரபல நடிகர் சூர்யா இன்று (ஜூலை.23) தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நடிகர் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். சென்னை ரசிகர்கள் இவரை அன்போடு ‘சின்ன தல’ என்றே அழைப்பார்கள். இந்நிலையில், நடிகர் சூர்யாவிற்கு நம்ம சின்ன தல சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.
இது தொடர்பான அவரது ட்வீட்டில், ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா. இன்றைக்கும், நாளைக்கும், எப்போது நிறைய பிளாக்பஸ்டர்கள் உங்களை சேர வேண்டும்’ என வாழ்த்துவதாக சுரேஷ் ரெய்னா தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, சூர்யா நடித்த ‘என்.ஜி.கே’ திரைப்படம் ரிலீசின் போது, ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது எதிர்பாராத விதமாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல்-ல் உங்களுக்கு பிடித்த வீரர் யார்? ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சூர்யா, ‘முதலில் நம்பாமல் பிறகு யாரை பிடிக்கும் என்று சொன்னால் அதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள். மிஸ்டர் மாஹி.. தோனி தான் பிடிக்கும். உங்களுடன் தொடர்பில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் எப்போதும் சி.எஸ்.கே ரசிகன் தான்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா, சமுத்திரக்கனி, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட்.30ம் தேதி ரிலீசாகிறது.
Have the best birthday, @Suriya_offl 🥳 Wishing you many more blockbusters today, tomorrow & always #HappyBirthdaySuriya
— Suresh Raina🇮🇳 (@ImRaina) July 23, 2019
Which player is from chennai super kings is yours favourite and why ?? 😋
— Suresh Raina🇮🇳 (@ImRaina) May 20, 2019