அருண் விஜய் - பிரசன்னா இணைந்து அசத்தும் ‘மாஃபியா’ மாஸ் டீசர் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Dec 09, 2019 06:00 PM
‘துருவங்கள் 16’, ‘நரகாசூரன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேனின் ‘மாஃபியா’ படத்தின் இரண்டாவது டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிச.8ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மாஃபியா’ திரைப்படத்தின் இரண்டாவது டீசர் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது சமூக வலைதளங்களில் ரிலீஸ் ஆகியுள்ளது.
அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் மாஸான டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம லைக்ஸ் குவித்து வருகிறது.
அருண் விஜய் - பிரசன்னா இணைந்து அசத்தும் ‘மாஃபியா’ மாஸ் டீசர் இதோ! வீடியோ