Breaking: ‘குற்றம் 23’ இயக்குநரின் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Dec 07, 2019 03:06 PM
பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தின் ஹீரோயின் குறித்த தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு வெளியான போலீஸ் த்ரில்லர் படமான ‘குற்றம் 23’ திரைப்படத்தின் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் மீண்டும் ‘AV31’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் அருண் விஜய் நடிக்கிறார். விஜய் ராகவேந்திராவின் ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரெஜினா கஸாண்ட்ரா நடிக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. முதன்முறையாக இந்த படத்தில் அருண் விஜய்யுடன் ரெஜினா ஜோடி சேர்ந்து நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சென்னை, டெல்லி மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெறவுள்ளன.
ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தவிர அருண் விஜய்யின் கைவசம் ‘சினம்’, ‘மாஃபியா’, ‘பாக்ஸர்’, ‘அக்னி சிறகுகள்’ உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.