Official: ரெஜினாவை தொடர்ந்து அருண் விஜய் படத்தில் இணைந்த ஹீரோயின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்தில் நடிகை ரெஜினா கஸாண்ட்ராவை தொடர்ந்து மற்றொரு ஹீரோயின் ஒப்பந்தமாகியுள்ளார்.

After Regina Cassandra, Stefy Patel joins the cast of Arun Vijay - Arivazhagan film AV 31

கடந்த 2017ம் ஆண்டு வெளியான போலீஸ் த்ரில்லர் படமான ‘குற்றம் 23’ திரைப்படத்தின் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் மீண்டும் ‘AV31’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் அருண் விஜய் நடிக்கிறார்.  விஜய் ராகவேந்திராவின் ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது.

இந்நிலையில், இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரெஜினா கஸாண்ட்ரா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்தில் மற்றொரு ஹீரோயினாக ஸ்டெஃபி பட்டேல் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று (டிச.9) தொடங்குகிறது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, டெல்லி மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

இந்த படத்தை தவிர அருண் விஜய்யின் கைவசம் ‘சினம்’, ‘மாஃபியா’, ‘பாக்ஸர்’, ‘அக்னி சிறகுகள்’ உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.