ரசிகரிடம் அருண் விஜய்யின் 'மாஃபியா' பட சீக்ரெட் சொன்ன கார்த்திக் நரேன்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 09, 2019 12:41 PM
'துருவங்கள் பதினாறு' பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் 'மாஃபியா'. இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் சார்பில் கே.சுபாஷ்கரன் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்க, கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர் ஒருவர் இயக்குநர் கார்த்திக் நரேனிடம், ''மாஃபி'யால நான் லீனியர் நரேஷன் இருக்கா ?, சாப்டர் 2 டிரை பண்ணுவீங்களா ?'' என்று கேட்டார். அதற்கு இயக்குநர் கார்த்திக் நரேன், இரண்டு கேள்விகளுக்கும் ஆம் என்ற ஒரே பதில் தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags : Mafia, Arun Vijay, Prasanna, Karthick Naren