சூப்பர் ஹிட் படத்திற்கு பிறகு மீண்டும் பிரபல இயக்குநருடன் கைக்கோர்க்கும் அருண் விஜய்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையுலகில் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும். இந்த வரிசையில் தற்போது ‘குற்றம் 23’ பட இயக்குநர் அறிவழகனும் - அருண் விஜயும் இணைந்துள்ளனர்.

Arun Vijay signs up new movie again with his hit combo Director.

ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பு இந்த டிசம்பர் தொடங்கி சென்னை, ஹைதராபாத், டெல்லி என்று பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது.

பெரும் பொருட்செலவோடு தயாராகும் இந்த படம் புதுவிதமான ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது சினம், பாக்சர், அக்னிச் சிறகுகள் என்று பல்வேறு படங்களை கைவசம் வைத்திருக்கும் அருண் விஜய், அவைகளைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்கிறார்.

இதில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார். மற்ற கதாப்பாத்திரங்களுக்கான நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது. இயக்குநர் அறிவழகனின் நெருங்கிய நண்பர் ராஜசேகர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இவர் முன்னதாக ’ஆர்யா 2’, ’ஆரஞ்ச்’ உள்ளிட்ட தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.