RRR Others USA
www.garudabazaar.com

பாலிவுட் நடிகைகளின் 'அரபிக்குத்து' வெர்ஷன்.. மூணு பேரும் செம்ம 'Tough' குடுத்து ஆடுறாங்களே..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அரபிக்குத்து பாடலுக்கு, மூன்று பாலிவுட் நடிகைகள் நடனமாடியுள்ள வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

arabic kuthu dance by shilpa shetty jacqueline and rakul preet

விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே பீஸ்ட் படத்தில் நடித்துள்ளது.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார். மேலும், இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அரபிக்குத்து 'vibes' இன்னும் அடங்கல..

ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி, 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதே போல, பீஸ்ட் படத்தின் போஸ்டர்களும் அடுத்தடுத்து வெளியாகி, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. முன்னதாக, கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக்குத்து' வெளியாகி இருந்தது.

உற்சாகத்தில் படக்குழு

இந்த பாடல் உலகளவில் வைரலாகி, ஏராளமான பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அரபிக்குத்து பாடலைத் தொடர்ந்து, மார்ச் 19 அன்று, கு.கார்த்திக் வரிகளில், தளபதி விஜய் பாடிய 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் ரிலீஸாகி, மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. பாடல்களும் அதற்கான புரோமோவும் படத்திற்கு மிகப்பெரிய ஹைப் ஏற்படுத்தி உள்ளதால், படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.

பாலிவுட் நடிகைகளின் அரபிக்குத்து

இன்னொரு பக்கம், ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியானாலும் அரபிக்குத்து பாடல் மீதான மோகம், கொஞ்சம் கூட குறையவில்லை. அந்த வகையில், சமீபத்தில் நடிகைகள் அஞ்சுகுரியன், திவ்யபாரதி, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடனமாடி வீடியோக்களாக வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், பாலிவுட் நடிகைகள் இணைந்து, அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

'அட்டாக்' என்னும் ஹிந்தி படத்தில் ஜான் ஆப்ரஹாம், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 1 ஆம் தேதி, இந்த திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அப்போது, ஜான் ஆப்ரஹாம் ஆரம்பித்து வைக்க, நடிகைகள் ஷில்பா ஷெட்டி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர், அரபிக்குத்து பாடலுக்கு மிகவும் அசத்தலாக நடனமாடியுள்ளனர்.

பாலிவுட் நடிகைகளின் 'அரபிக்குத்து' வெர்ஷன்.. மூணு பேரும் செம்ம 'TOUGH' குடுத்து ஆடுறாங்களே.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

arabic kuthu dance by shilpa shetty jacqueline and rakul preet

People looking for online information on Anirudh Ravichander, Arabic Kuthu, Beast, Jacqueline Fernandez, John Abraham, Nelson Dilipkumar, Rakul Preet Singh, Shilpa Shetty, Vijay will find this news story useful.