RRR Others USA
www.garudabazaar.com

போடு சக்க! Beast அரபிக்குத்து.. கீர்த்தி ஷெட்டி செம குத்தாட்டம் .. சிதறவிடும் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாட்டுக்கு நடிகை கீர்த்தி ஷெட்டி செம்ம ஜாலி நடனம் ஆடி உள்ளார்.

krithi shetty dancing beast arabic kuthu song on instagram

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். 

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். 200 மில்லியன் வியூசை இந்த பாடல் கடந்துள்ளது.

krithi shetty dancing beast arabic kuthu song on instagram

மேலும் இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக், திவ்யபாரதி, சஞ்சனா, ஷிவானி நாராயணன், கீர்த்தி சுரேஷ், சுஜிதா, கனிகா, யுவன் சங்கர் ராஜா, சம்யுக்தா ஹெக்டே, ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர்.

krithi shetty dancing beast arabic kuthu song on instagram

இந்நிலையில் நடிகை கீர்த்தி ஷெட்டியும் அரபிக்குத்து பாட்டுக்கு செமயாக குத்து டான்ஸ் ஆடியுள்ளார். சேலையில் போட்டோசூட் நடத்திய பின் அதே இடத்தில் நடனமும் ஆடியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது. 

காதலர் தினத்தை முன்னிட்டு, இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்தில், கீர்த்தி ஷெட்டி தோற்றத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

போடு சக்க! BEAST அரபிக்குத்து.. கீர்த்தி ஷெட்டி செம குத்தாட்டம் .. சிதறவிடும் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

krithi shetty dancing beast arabic kuthu song on instagram

People looking for online information on Arabic Kuththu, Beast, Krithi Shetty, Pooja Hegde, Vijay will find this news story useful.