ஜான்சி ராணியாக நடிக்கும் ‘பாகுபலி’ தேவசேனா
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 26, 2019 11:10 AM
மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘சைரா நரசிம்மா ரெட்டி’ திரைப்படத்தில் ‘பாகுபலி’ புகழ் தேவசேனா நடிகை அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

‘பாகுபலி’, ‘பாகமதி’ திரைப்படங்களுக்கு பிறகு அனுஷ்கா ஷெட்டி, பீரியட் படமாக உருவாகியுள்ள ‘சைரா நரசிம்மா ரெட்டி’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், தமன்னா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சைரா நரசிம்மா ரெட்டி’ திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் நடிகர் ராம்சரண் தயாரித்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசார் படத்தொகுப்பு செய்துள்ளார்.
பருச்சுரி பிரதர்ஸ் கதை எழுத விஜய் பாலாஜி இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். அமித் திரிவேதி இசையில் சமீபத்தில் வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சரித்திர கால திரைப்படம் என்பதாலும், சுதந்திர போராட்ட வீரரின் கதை என்பதாலும், போர் காட்சிகளுடன் வியக்க வைக்கும் சண்டை காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.
மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை அனுஷ்கா நடித்துள்ள கேரக்டர் குறித்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது. ‘பாகுபலி’ படங்களில் தேவசேனாவாக கம்பீரம் காட்டிய அனுஷ்கா, இப்படத்தின் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தற்போது ஹேமந்த் மதுர்கர் இயக்கத்தில் ‘சைலன்ஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் உள்ள சீயாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மாதவன், ஷாலினி பாண்டே, ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.