"விஜய் அண்ணா சிரிப்பு பிடிக்கும்.. நயன்தாரா இனி எனக்கு.." - ‘பிகில்’ அனுபவம் பகிர்ந்த Comedy Star
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 19, 2019 10:08 PM
நடிகர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் யோகி பாபு, விஜய் உடன் பிகில் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துக் கொண்டார்.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது, தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய சென்சேஷன் காமெடி நடிகர் யோகி பாபு, “விஜய் அண்ணாவோட சிரிப்பு ரொம்ப பிடிக்கும். அண்ணா சைலண்ட்டா சிரிப்பாரு.. அட்லி செட் அதிருர மாதிரி சிரிப்பாரு.. நான் உன் கூட நடிச்சதை விட உன் டூப் கூட நடிச்சது தான் அதிகம்னு விஜய் அண்ணா சொன்னாரு.."
"நயன்தாரா என்ன அண்ணான்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. அட்லியால இனிமேல் எந்த படமா இருந்தாலும் அண்ணான்னு தான் கூப்பிடுவாங்கன்னு அட்லி சொன்னாரு..” என்றார். இதையடுத்து, பிரியங்கா சோப்ராவுடனான மீம் யோகி பாபுவிற்காக திரையிடப்பட்டது.
பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் சுவாரஸ்ய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இணைந்திருங்கள்.