''என் ஃபோட்டோ கிழிங்க, என் ரசிகர்கள் மேல கை வைக்காதீங்க'' - பேனர் விவகாரம் குறித்து விஜய்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 19, 2019 11:40 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (செப்டம்பர் 19) நடைபெற்றது

விழாவில் பேசிய தளபதி விஜய், ''பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல்.! இது போன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க. சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க.
பேனர் கட் அவுட்லாம் கிழிச்சப்போ ரசிகர் வறுத்தப்பட்ட அளவு நானும் வறுத்தப்பட்டேன்.. என் போட்டோ கிழிங்க உடைங்க என் ரசிகன் மேல கை வைக்காதீங்க. என் ரசிகர்கள் எவ்வளோ ஆசைகளோட கனவோட சிரமத்துள பேனர்லாம் வெக்குறாங்க அதை கிழிச்சா அவங்களுக்கு கோவம் வரது நியாயம் தான்! அதுக்காக அவங்க மேல கை வைக்காதீங்க இது வேண்டுகோள்! கேக்க முடிஞ்சா கேளுங்க என்று பேசினார்.