சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமான போர் காட்சிகளுடன் உருவான "சைரா" டிரெய்லர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 26, 2019 10:31 AM
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள சரித்திர திரைப்படம் 'சைரா நரசிம்மரெட்டி'. இந்த படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பாகுபலிக்கு இணையாக இருப்பதாகவும், பாகுபலியை விட பிரமாண்டமாக இருப்பதாகவும் இணையதளத்தில் விமர்சனங்கள் தெறிக்க வைத்தன. தற்போது இந்த போர்க்காட்சியின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
சிரஞ்சீவியுடன் நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, ஜெகபதிபாபு, கிச்சா சுதீப் உட்பட பல இந்திய பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். அமித் திரிவேதி இசையில், ரத்னவேலு ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண் தேஜா தயாரித்துள்ளார்.
சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமான போர் காட்சிகளுடன் உருவான "சைரா" டிரெய்லர் இதோ வீடியோ