மரண மாஸாக தளபதி விஜய் பேசும் பிகில் இசை வெளியீட்டு விழா புரோமோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 21, 2019 07:50 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் 'பிகில்'. அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் தளபதி விஜய்யின் பேச்சு செம வைரலானது. சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. அதன் புரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
மரண மாஸாக தளபதி விஜய் பேசும் பிகில் இசை வெளியீட்டு விழா புரோமோ வீடியோ
Tags : Bigil, Vijay, Nayanthara, AR Rahman