'டைரக்டர் டூப் போட்டுத் தான் எடுத்தாரு' - தளபதி விஜய்யின் பிகில் குறித்து பிரபல நடிகர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 23, 2019 03:08 PM
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளையை முன்னிட்டு வெளியாகவிருக்கிற படம் 'பிகில்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ஜி.கே.விஷ்ணு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெண்கள் ஃபுட்பால் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெற்றது.
விழாவில் பேசிய யோகி பாபு, ''இந்த படத்துல வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அட்லி, விஜய் அண்ணன், ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு என் நன்றி. இந்த படத்துல விஜய் அண்ணன், உன் கூட நடிச்சத விட உன் டூப்பு கூட தான் அதிகமா நடிக்கிறேன் என்று நக்கலாக சொன்னார். ஏன்னா டைரக்டர் நான் ஃபுட் பால் விளையாடுற சீன் டூப் போட்டுத் தான் எடுத்தாரு. விஜய் அண்ணே எப்பவும் வேற லெவல். அத தான் பார்த்திருப்பிங்க'' என்றார்.
'டைரக்டர் டூப் போட்டுத் தான் எடுத்தாரு' - தளபதி விஜய்யின் பிகில் குறித்து பிரபல நடிகர் வீடியோ