''போராடி ஜெய்ச்ச நயன்தாராவும்...'' - தளபதி விஜய் புகழாரம்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 23, 2019 06:26 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் தளபதி விஜய்யின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.
![Thalapathy Vijay about nayanthara, Atlee, AR Rahman, Bigil Thalapathy Vijay about nayanthara, Atlee, AR Rahman, Bigil](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/thalapathy-vijay-about-nayanthara-atlee-ar-rahman-bigil-photos-pictures-stills.jpg)
தளபதி விஜய் பேசிய அந்த வீடியோவை சன் டிவி தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடிகை நயன்தாரா குறித்து பேசிய விஜய் , ''அறம்' செய்ய விரும்புனு சொல்லுவாங்க. அறம் மட்டும் அல்ல. அறம் மட்டுமல்ல செய்யுற எல்லா படத்தையும் விரும்பி செய்யுற நயன்தாரா அவர்கள்.
அவங்களோட இது மூனாவது படம். சிவகாசியோட சேர்த்து சொல்றேன். அந்த சிவகாசி படத்துல கோடம்பாக்கம் ஏரியா பாட்ட பாத்திருப்பிங்க. இந்த ஏரியா, அந்த ஏரியாவுலனு எல்லா ஏரியாவுலயும் கலக்கு கலக்குறாங்க. ஜெய்க்குறதுக்காக போராடுற பெண்கள் இருக்குற இந்த படத்துல போராடி ஜெய்ச்ச நயன்தாராவும் இருக்காங்க என்பது பொருத்தமான ஒரு விஷயம்.'' என்றார்.
''போராடி ஜெய்ச்ச நயன்தாராவும்...'' - தளபதி விஜய் புகழாரம் வீடியோ