'அடுத்தகட்ட பணிக்கு தயார்' - பிரபல தயாரிப்பாளருக்கு சேரன் பதில்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 26, 2019 11:08 AM
கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இயக்குநர் சேரன் வெளியேறினார். அவர் வெளியேறியது ரசிகர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் வெளியேறியதும் கமலிடம் 90 நாட்கள் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றதே வெற்றி என்று மகிழ்ச்சியாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் இருக்கும் போதே விஜய் சேதுபதி தான் என்னை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தார் என்றும் வெளியே வந்ததும் அவருடன் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக, ''வெல்கம் பேக் சேரன். சிறப்பாக உங்கள் பணிகளை செய்தீர்கள். அடுத்த பணி காத்திருக்கிறது'' என்று வாழ்த்துகள் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த இயக்குநர் சேரன், ''மிக்க நன்றி சார்... அடுத்த கட்ட பணிக்கு தயார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மிக்க நன்றி சார்.... அடுத்த கட்ட பணிக்கு தயார். https://t.co/5JTZS7c5iI
— Cheran (@directorcheran) September 26, 2019