மீண்டும் இணையும் அனிருத் - ஹரிஷ் கல்யாண் கூட்டணி!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 31, 2019 09:12 AM
'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்துக்கு பிறகு ஹரீஸ் கல்யாண் நடித்துவரும் படம் 'தனுசு ராசி நேயர்களே'. இந்த படத்தை 'குணா', 'மகாநதி' படங்களின் இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார்.
இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, முனீஷ்காந்த், ரேணுகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் பிக்சர்ஸ் தயாரி்தது வருகிறது.
'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தில் அனிருத் பாடிய கண்ணம்மா பாடல் இளைஞர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றது இதைத் தொடர்ந்து ஹரீஸ் கல்யாணின் 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் இடம்பெறும் பெப்பியான பாடலை அனிருத் பாடியுள்ளார். ஜிப்ரான் இசையில் அனிருத் பாடிய பாடலை நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.