ரைசா இல்ல.. வேறு ஒரு பிக் பாஸ் பிரபலத்துடன் ஜோடி சேரும் ஹரிஷ் கல்யாண்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தில் பாலிவுட் ஹீரோயினுக்கு பதிலாக புதிய ஹீரோயின் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rhea Chakroborty replaced by Hindi Bigg Boss fame Digangana Suryavanshi in Harish Kalyan's Dhanusu Raasi Neyargale

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்ட ஹரிஷ் கல்யாண், கடந்த 2018ம் ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ரைசாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.

இந்த படம் சூப்பர்ஹிட்டானதை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.  இப்படத்தில் மெக்கானிக்காக நடிக்கும் ஹரிஷ் கல்யாண் ஜோதிடத்தின் மீது நம்பிக்கையுள்ள இளைஞராக நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரியா சக்ரபோட்டி நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் மூலம் ரியா தமிழ் திரையுலகில் அறிமுகமாவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேதிகள் பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து ரியா விலகியதாகவும், அவருக்கு பதிலாக புதிய ஹீரோயின் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரியா சக்ரபோட்டிக்கு பதிலாக ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் பங்கேற்ற டிகங்கனா சூர்யவன்ஷி, தமிழ் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். டிகங்கனா சூர்யவன்ஷி, தெலுங்கில் ‘RX100’ ஹீரோ கார்த்திகேயா நடிப்பில் வெளியான ‘ஹிப்பி’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 

ஸ்ரீ கோகுலம் மூவீஸ் பேனரின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் இதர கதாபாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.