'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' - வனிதாவின் வருகை குறித்து முன்னாள் Bigg Boss Star
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 03, 2019 11:54 AM
பிக்பாஸ் சீஸன் 1ல் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் உள்ளே நுழைந்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் ஹரீஷ் கல்யாண். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அவர் நடிக்கும் படங்கள் குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் Behindswood TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அவரிடம் தற்போதை பிக்பாஸ் சீசன் 3 குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ''கோடிக்கணக்கான மக்கள் நம்மை பார்க்கிறார்கள் அந்த பிரபலத்தன்மை வேறு எதில் கிடைக்கும். ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது என்றார்.
பின்னர் வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதலளித்த அவர், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது தான் பிக்பாஸ். எங்கள் சீசனில் சுஜாவை எவிக்ட் பண்ணி சீக்ரெட் ரூமில் வைத்தார்கள். பிறகு திரும்ப உள்ளே கொண்டு வந்தார்கள். அதனால் அங்கு எதையும் எதிர்பார்க்க முடியாது'' என்றார்.
'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' - வனிதாவின் வருகை குறித்து முன்னாள் BIGG BOSS STAR வீடியோ