ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் அருண் விஜய் ஹீரோயின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்திருந்தார் ஹரிஷ் கல்யாண். அவரின் அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர், தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Thadam actress Tanya play the female lead in Harish Kalyan Next

இதற்கிடையில், இந்தியில் எடுக்கப்பட்ட விக்கி டோனார் என்ற படம் வெற்றி பெற்றது. அதை தமிழில் தாராள பிரபு என பெயரிட்டு, ரீ-மேக் செய்கின்றனர். அந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். விக்கி டோனார் படத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்த கேரக்டரில் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார். அதேபோல, யாமி கவுதம் கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என படக் குழுவினர் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பல நடிகைகள், ஆலோசனையின் போது பரிந்துரைக்கப்பட்டு, எல்லோரும் நிராகரிக்கப்பட்டனர். இறுதியில், நடிகை தான்யா ஹோப், யாமி கவுதம் கேரக்டரில் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற தடம் படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் தான்யா.