www.garudabazaar.com
iTechUS

‘ரஞ்சிதமே’ பாடலுக்காக ஒத்திகை பார்த்த விஜய்.. தீப்பறந்த ஸ்டெப்ஸ்.. பட்டாசான வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் அண்மையில் வாரிசு படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ரஞ்சிதமே பாடல் ஷூட்டிங் போது நடிகர் விஜய் நடன ஒத்திகை பார்த்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Actor vijay rehearsal Ranjithame song steps video goes viral

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | KGF யாஷ் கொடுத்த விருந்து.. நெகிழ்ந்துபோன துல்கர் சல்மானின் வைரல் போஸ்ட்..!

வம்சி பைடிபள்ளி இயக்கிய வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தமிழில் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற, தெலுங்கில் வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியானது.

முதலில் இப்படத்தில் இடம் பெற்றிருந்த ரஞ்சிதமே பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. தமனின் அதிரடியான இசை, நடிகர் விஜய்யின் அனல் பறக்கும் நடனம் என இந்த பாடல் ரசிகர்களுக்கு ட்ரீட்டாகவே அமைந்திருந்தது. இந்த பாடல் உருவாக்கத்தின் போது கடைசி நிமிடத்தில் வரும் நடனத்தை ஒரே ஷாட்டில் விஜய் ஆடியதாக தமன் நம்முடைய Behindwoods-க்கு அளித்த பேட்டியில் ஒருமுறை தெரிவித்திருந்தார்.

Actor vijay rehearsal Ranjithame song steps video goes viral

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், ரஞ்சிதமே பாடலுக்கு நடிகர் விஜய் நடன ஒத்திகை பார்க்கும் வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இதில், டான்ஸ் மாஸ்டர் ஜானியின் அருகே விஜய் ஆடுகிறார். முழு ஸ்டெப்களையும் அச்சு பிசறாமல் ஆடிய விஜய் ஒருமுறை கூட டான்ஸ் மாஸ்டரை பார்க்காமல் கச்சிதமாக ஆடி முடிக்கிறார். இதனிடையே ராஷ்மிகாவும் விஜய்யுடன் இணைந்து ஆடுகிறார்.

Actor vijay rehearsal Ranjithame song steps video goes viral

Images are subject to © copyright to their respective owners.

அந்த வீடியோவில் விஜய் ஆடி முடிக்க டான்ஸ் மாஸ்டர் ஜானி உள்ளிட்ட அனைவரும் விஜய்க்கு கைதட்டி பாராட்டு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | "சீதாராமம் பார்ட் - 2 வருமா?".. ரசிகரின் கேள்விக்கு துல்கர் சல்மான் கொடுத்த கலகல பதில்..!

தொடர்புடைய இணைப்புகள்

Actor vijay rehearsal Ranjithame song steps video goes viral

People looking for online information on Ranjithame Song, Ranjithame song Rehearsal, Varisu, Vijay will find this news story useful.