மணிரத்னத்தின் படத்துக்காக இதனை செய்யும் 'அசுரன்' தனுஷ்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 07, 2020 06:40 PM
இயக்குநர் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக தயாரித்திருக்கும் படம் 'வானம் கொட்டட்டும்'. தனா இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் நாளை (08.01.2020) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு, மடோனா செபாஸ்டியன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு மணிரத்னத்துடன் இணைந்து இந்த படத்தின் இயக்குநர் தனா கதை எழுதியுள்ளார்.
இந்த படம் மூலம் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்துக்கு ப்ரீத்தா ஜெயராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டீஸரை தனுஷ் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Dhanush, Vaanam Kottattum, Mani Ratnam, Aishwarya Rajesh