கடந்த வருடம் ஜோதிகாவின் நடிப்பில் கடந்த வருடம் 'ராட்சசி', 'ஜாக்பாட்', 'தம்பி' என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் தம்பி படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை Behindwoods Gold Medals விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு 'ராட்சசி படத்தில் நடித்ததற்காக Best Actor In a Lead Role விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதற்காக அவர் அரங்கத்தில் நுழைந்த போது, கரவொலிகளால் அரங்கமே அதிர்ந்தது. அப்போது தொகுப்பாளர் தாராவின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது சூர்யாவுடன் இணைந்து நடிப்பது குறித்து கேட்ட போது, ''சரியான கதைக்காக நாங்க ரெண்டு பேரும் காத்திருக்கிறோம். கதை புதுசா இருக்கணும். இதுவரைக்கும் பண்ற கதைகள விட வித்தியாசமா இருக்கணும்'' என்றார். பின்னர் மேடையில் 'ராட்சசி' பட டயலாக்கை பேசி அசத்தினார்.
சூர்யாவுடன் நடிக்கும் படம் - ஜோதிகா பதில் வீடியோ