இயக்குநர் மணிரத்னத்தின் 'வானம் கொட்டட்டும்' டீஸர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக தயாரத்துள்ள படம் வானம் கொட்டட்டும் . இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, மடோனா செபாஸ்டியன், சரத்குமார்,  ராதிகா, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Mani Ratnam, Vikram Prabhu, Aishwarya Rajesh, raadhika, Sid Sriram's Vaanam Kottatum Teaser

இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து கதை எழுதி, தனா இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த ‘படைவீரன்’ திரைப்படத்தை இயக்கியவர். ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் மூலம் சென்சேஷனல் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்த படத்துக்கு ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னத்தின் 'வானம் கொட்டட்டும்' டீஸர் இதோ வீடியோ

Entertainment sub editor