கவுதம் மேனன்-சித் ஸ்ரீராம் காம்போ ஒண்ணும் புதுசில்ல-ஆனா, சித்தார்துக்கு இதுல என்ன சம்பந்தம்?
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து நடித்த 'சிவப்பு மஞ்சள் பச்சை' கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகியிருந்தது. இதனையடுத்து சித்தார்த் ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'டக்கர்'.
இந்த படத்தை கப்பல் பட இயக்குநர் கார்த்தி ஜி.கிருஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக 'மஜிலி' என்ற தெலுங்கு படத்தில் நடித்த திவ்யான்ஷா கௌசிக் நடித்துள்ளார். டக்கர் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் யோகி பாபு இரட்டை வேடத்தில் தந்தை-மகனாக நடிக்கிறார். தந்தை வேடம் ஒரு டான் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் சிம்பு, ஆண்ட்ரியா பாடிய ’ரெய்ன்போ திரளில்’ பாடலின் லிரிக் வீடியோ ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இயக்குநர் கவுதம் மேனன் மற்றும் சித் ஸ்ரீராம் இணைந்து ப்ரேக் அப் சாங் ஒன்றை இந்த படத்துக்காக பாடிவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதுவிதான காம்போவில் உருவாகும் பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.