LIGER D Logo Top
www.garudabazaar.com

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம்.. வெளியான முதல் நாள் ஷூட்டிங் பூஜை வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா & சிறுத்தை சிவா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

Siruthai Siva Suriya 42 Movie Pooja Video Released

Also Read | 'கோப்ரா' படத்தின் டிரெய்லரை பாராட்டிய சுரேஷ் ரெய்னா.. உற்சாகமான இர்பான் பதான்! வைரல் ட்வீட்

'சிறுத்தை' சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கும்   "சூர்யா 42" படத்தின் படப்பிடிப்பு   lavish hotel செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கடந்த (ஆகஸ்ட் 24, 2022) தேதி இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Siruthai Siva Suriya 42 Movie Pooja Video Released

‘சூர்யா 42’ என்று தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படம், Studio Green நிறுவனத்தின் 25 வது படமாக உருவாகிறது. இப்படத்தினை  K.E.  ஞானவேல்ராஜா, மிகப் பெரிய பான்-இந்திய வெற்றி திரைப்படங்களில் சிலவற்றைத் தயாரித்த  UV Creations வம்சி-பிரமோத்  உடன் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கின்றனர். 

Siruthai Siva Suriya 42 Movie Pooja Video Released

இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட்டின் பிரபல நடிகை திஷா பதானி நடிக்கிறார். யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இன்னும் சில முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Siruthai Siva Suriya 42 Movie Pooja Video Released

சூர்யா 42 படத்தில் 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அவர் சமீபத்திய பான்-இந்தியன் பிளாக்பஸ்டர் 'புஷ்பா' உட்பட பல சூப்பர் ஹிட் ஆல்பங்களை தந்துள்ளது குறிப்பிடதக்கது.

Siruthai Siva Suriya 42 Movie Pooja Video Released

இந்த படத்திற்கு வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய, மிலன் கலை இயக்கம் செய்கிறார்.  சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகள்  அமைக்கிறார், ஆதி நாராயணா திரைகதை எழுத, மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.

Also Read | நானி நடிக்கும் புதிய PAN INDIA படம்.. சில்க் ஸ்மிதா போட்டோவுடன் வெளிவந்த ரிலீஸ் தேதி போஸ்டர்!

சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம்.. வெளியான முதல் நாள் ஷூட்டிங் பூஜை வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Siruthai Siva Suriya 42 Movie Pooja Video Released

People looking for online information on Siruthai Siva, Suriya, Suriya 42, Suriya 42 DSP Movie, Suriya 42 Movie Pooja Video will find this news story useful.