www.garudabazaar.com

“செல்வராகவன் சார் என் மானசீக குரு... முதல் பட டைட்டிலே அவர் தாக்கம்தான்.” - ‘பகாசூரன்’ மோகன்.ஜி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’,  ‘ருத்ர தாண்டவம்’  படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன்.G. இவர் அடுத்ததாக ஜி.எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கும் படம் ‘பகாசூரன்’.

selvaraghavan sir is my mentor Says bakasuran Mohan G

இந்த  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார்.  ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு  நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல் சுரேஷ், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.

இப்படத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக நடிக்கும் இயக்குனர் செல்வராகவனை பற்றி பேசிய இப்படத்தின் இயக்குநர் மோகன்.ஜி, “செல்வராகவன் சார் இயக்கிய காதல் கொண்டேன் படம் பார்த்த பின்தான் சினிமா மீது எனக்கு காதல் ஏற்பட்டது.. யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனாலும் செல்வராகவன் அவர்களையே மானசீக குருவாக ஏற்றுக்கொண்டேன்..

selvaraghavan sir is my mentor Says bakasuran Mohan G

என் முதல் படமான  பழைய வண்ணாரப்பேட்டை பட டைட்டிலும் அதில் வரும் வில்லன் கதாபாத்திரமான பட்டறை குமாரும் இவருடைய தாக்கம்தான். அதன் பின், ‘திரெளபதி’ படத்திலிருந்து எனக்கென ஒரு பாணியை தேர்வு செய்து கொண்டேன்.. குருவாக ஏற்றுக் கொண்டவரையே என் இயக்கத்தில் நடிக்க வைப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

அவர் நடிப்பை பற்றி நான் சொல்வதை விட டீசர் பார்த்து நீங்களே  தெரிந்து கொள்வீர்கள். குருவாக, அண்ணனாக என் மீது உள்ள விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு  ‘பகாசூரன்’  கதைக்காக இதில் நடித்த செல்வராகவன் சாருக்கு இந்த நேரத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். செல்வராகவன் சாருக்கு இருக்கும் கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவருக்கு என்னுடைய அன்பளிப்பு இந்த ’பகாசூரன்’ திரைப்படம்.”என நெகிழ்கிறார் மோகன்.ஜி.

தொடர்புடைய இணைப்புகள்

selvaraghavan sir is my mentor Says bakasuran Mohan G

People looking for online information on Bakasuran, Bakasuran Teaser, Mohan g, Selvaraghavan will find this news story useful.