Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

சிறுத்தை சிவா இயக்க சூர்யா நடிக்கும் புதிய படம்.. கேமரா மேன் இந்த திருப்பூர்காரரா? செம தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் ஒளிப்பதிவாளர் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Siruthai SIva Suriya 42 Movie DOP Vetri Palanisamy

இயக்குனர் சிவா கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.

இந்நிலையில் இயக்குனர் சிவா தனது அடுத்த படத்தை சூர்யா நடிப்பில் இயக்க உள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது. இச்சூழலில் இந்த படத்தின் பூஜை (21.08.2022) இன்று காலை 7 மணிக்கு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு அகரம் பவுண்டேஷன் அமைந்துள்ள ராமாபுரத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த படத்தில் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய உள்ளார். வசனங்களை மதன் கார்க்கி எழுத உள்ளார்.  ஒளிப்பதிவாளராக இயக்குனர் சிவாவின் நண்பர் வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். இந்த தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுப்ரீம் சுந்தர் பகிர்ந்துள்ளார்.

 

ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமி இயக்குனர் சிவாவுடன் தமிழ்நாடு திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு பயின்றவர். சிவா இயக்கிய சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த படங்களின் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமி தான்.

Siruthai SIva Suriya 42 Movie DOP Vetri Palanisamy

திருப்பூர் பல்லடத்தை சார்ந்த வெற்றி பழனிச்சாமி ஏர்முனை என்ற விவசாய அமைப்பையும் நடத்தி வருகிறார். ஒளிப்பதிவாளர் வெற்றியின் தந்தை பழனிச்சாமி கிணத்துக்கடவு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Siruthai SIva Suriya 42 Movie DOP Vetri Palanisamy

People looking for online information on DOP Vetri, Siva, Suriya, Suriya 42, Vetri will find this news story useful.