www.garudabazaar.com

"நீயும் கோவப்பட்டு கத்து!".. மடியில் ஏறிக்கொண்டு அழுத அக்‌ஷராவுக்கு அவரது அண்ணன் அட்வைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி 78 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

akshara cries her brother advices biggboss 5 tamil

இதன் ஒரு அங்கமாக, பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் உறவினர்கள் வரத் தொடங்கியுள்ளனர். அதன்படி, பிக்பாஸ் ஃப்ரீஸ் என்று சொன்னால் அசைவின்றி நிற்கும் டாஸ்க்கை அனைவரும் விளையாண்டு கொண்டிருந்தபோது அக்‌ஷராவின் செல்லப் பெயரான குகூ என்பதை சொல்லி யாரோ அழைத்ததாகவும், அது தங்களுக்கு கேட்டதாகவும் பிரியங்காவும் நிரூப்பும் கூற, அக்‌ஷரா ஆசையாக ஓடி வந்து தன் வீட்டார் வருவதை எதிர்நோக்கினார்.

அப்போது அக்‌ஷராவின் அம்மாவும், அண்ணனும் வருகை தந்ததும், அக்‌ஷரா ஆனந்த கண்ணீரில் அவர்களை கட்டிக்கொண்டார். அதன் பின்னர் அம்மாவிடமும், அண்ணனிடம் மாறி மாறி கட்டிப்பிடித்துக்கொண்ட அக்‌ஷரா, பின்னர் அண்ணன் மடியில் ஏறிப் படுத்துக்கொண்டு சின்னக் குழந்தை போல் அழுதார்.

akshara cries her brother advices biggboss 5 tamil

அதன் பின்னர், அக்‌ஷராவை அவர் தேற்றிவிட்டு பின்பு, அக்‌ஷராவிடம் பேசிய அக்‌ஷராவின் அண்ணன், “நீ சின்ன குழந்தை. உடல் ரீதியாக புண்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள். ஆண்களுக்கு நிகராக போட்டி போட, ஒரு வரையறை வைத்துக்கொள். அவங்க கோவப்பட்டா நீயும் கோவப்பட்டு கத்து. ரொம்ப கோவம் வந்தா நீயும் ரொம்ப கோவப்பட்டு கத்து. ஆனால் பாய்ண்டு பாய்ண்ட்டாக பேசு. பேசும் ஒவ்வொன்றையும் வேலிடான பாய்ண்டாக பேசு.” என்று கூறினார்.

akshara cries her brother advices biggboss 5 tamil

மேலும் பேசியவர், “கமல் சாரிடம் சில விஷயங்களை சொல்லும்போது கூட நீ தடுமாறினாய். நாங்கள் தான் வீட்டில் இருந்து அனைத்தையும் பார்க்கிறோமே? அடுத்த முறை அப்படியெல்லாம் இல்லாமல் செய்யாமல், நான் சொன்னதை பின்பற்றி பேசு” என அட்வைஸ் செய்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

akshara cries her brother advices biggboss 5 tamil

People looking for online information on Akshara, Akshara amy, Akshara Reddy, Biggboss tamil 5, BiggBossTamil5, Trending, Vijay Television, Vijay tv will find this news story useful.