www.garudabazaar.com

"வந்துட்டான்யா.. வந்துட்டான்யா".. திரும்பவும் வந்தாச்சு ரசிகர்களின் favourite task! #BiggBoss5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வீட்டுக்குள் கிட்டத்தட்ட 78 நாட்கள் ஹவுஸ் மேட்ஸாக வாழ்ந்தேவிட்டனர் என்று சொல்லலாம்.

biggboss5 popular favourite freeze task came back trending

முதலில் 18 போட்டியாளர்களுடன் இணைந்த இந்த பிக்பாஸ் வீட்டில், பின்னர் நமீதா மாரிமுத்துவை தவிர்த்து நாடியா சாங், அபிஷேக், சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அண்ணாச்சி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். 

இதன் பின்னர், அமீர் மற்றும் சஞ்சீவ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குல் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தனர். இவர்களுக்கு முன்னரே வைல்டு கார்டு எண்ட்ரியாக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அபிஷேக் பின்னர் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆனார். 

biggboss5 popular favourite freeze task came back trending

இந்நிலையில் தற்போது 10 போட்டியாளர்களுடன் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலே என்கிற இறுதி ரேஸ் நடந்து கொண்டிருப்பதால், இதைவிடவும் கடினமான டாஸ்குகளை அடுத்தடுத்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது ஒருபுறமிருக்கும் சவால்.

ஆனால், இதனிடையே தற்போது ஒரு புதிய டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த டாஸ்க் இந்த சீசனில் தான் புதிது என்றாலும், அனைவரும் பார்த்து பழகிய டாஸ்க்தான் இந்த டாஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், இந்த டாஸ்க் எப்போது வரும் என்று கிட்டத்தட்ட அனைத்து பிக்பாஸ் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஒரு முக்கியமான டாஸ்க் இது.

biggboss5 popular favourite freeze task came back trending

அதுதான் பிக்பாஸ் ஃப்ரீஸ் என்று சொன்னால், மறுமுறை உத்தரவு வரும்வரை அப்படியே நின்று விட வேண்டும் என்கிற டாஸ்க். இந்த டாஸ்கில் ஒருமுறை ஃப்ரீஸ் என்று சொன்னதும் அந்த ஒரு நேரத்தில் என்ன நடந்தாலும் எமோஷனல் ஆகாமல்,  போட்டியாளர்கள் அப்படியே நின்ற இடத்திலேயே அல்லது இருந்தபடியே அங்கசைவின்றி உறைந்துவிட வேண்டும்.

biggboss5 popular favourite freeze task came back trending

இந்த டாஸ்க் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே பிரபலமான ஒரு டாஸ்க். இப்போது அந்த டாஸ்க் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்னதான் இது ஒரு ஜாலியான ஒரு டாஸ்க்காக இருந்தாலும், இதிலும் நம் ஹவுஸ்மேட்ஸிடையே சண்டை வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய இணைப்புகள்

biggboss5 popular favourite freeze task came back trending

People looking for online information on Akshara varun, Amir pavani, Biggboss freeze, Biggboss freeze task, BiggBoss5, Biggboss5 tamil, Biggboss5 task, Vijay tv will find this news story useful.