www.garudabazaar.com

மீண்டும் ஆக்ரோஷமான அக்‌ஷரா! Task-ன் போது டயஸை ஓங்கி அடித்து பரபரப்பு! #BiggBossTamil

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் அக்‌ஷரா தன் ஆக்ரோஷத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவார். குறிப்பாக டாஸ்குகளின்போது தமது முழு ஆற்றலையும் பயன்படுத்தி வலிமையுடன் விளையாடும் அக்‌ஷரா, தற்போது பிக்பாஸ் வீட்டில் நடக்கும் ஃபினாலே ரேஸ் விளையாட்டுகளில் ஃபுல் ஃபார்மில் இருந்து வருகிறார். 

akshara reddy angry activity dice task biggbossstamil5

இதில் போட்டியாளர்களின் படம் இருக்கும் டயஸ்களை ஒவ்வொரு அணியினரு உருட்ட வேண்டும். பிக்பாஸ் பெல் அடிக்கும்போது அது நிறுத்தப்பட வேண்டும். அப்போது யாருடைய படம் மேலே இருக்கிறதோ, அந்த அணியினர் பாய்ண்ட் பெறுவார்கள். இதில் ராஜூ, டயஸ் மீது ஏறி அமர்ந்துகொள்ள, அப்ப்டி இருந்தால் எப்படி உருட்டுவது? என அக்‌ஷரா சண்டை போட்டார். 

akshara reddy angry activity dice task biggbossstamil5

இதனிடையே பிரியங்காவுக்கும் அக்‌ஷராவுக்கும் வார்த்தை போர் எழுந்தது. அதன் பின்னர் ராஜூ டயஸ் மீது அமர்ந்திருந்ததால், டயஸை அக்‌ஷரா கோபத்தில் ஓங்கி அடித்துவிட்டார். அக்‌ஷராவின் இந்த ஆக்ரோஷ ஆக்டிவிட்டியை பார்த்ததும் தாமரை அலறி, கத்தியே விட்டார். ஆம், இந்த டாஸ்கின்போது, அக்‌ஷராவின் அருகிலேயே தாமரை நின்றுகொண்டிருந்தார். அவர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அக்‌ஷரா டயஸ் மீது ஓங்கி அடித்துவிட்ட்டார். 

akshara reddy angry activity dice task biggbossstamil5

முன்னதாக பொம்மை டாஸ்கின்போது அக்‌ஷரா இதையே செய்தார். பொம்மை டாஸ்கின்போது, நிரூப் அக்‌ஷராவை வலுவாக பிடித்துக்கொண்டு கூடாரத்துக்குள் நுழையவிடாமல் தடுத்தார். அப்போது அக்‌ஷராவுக்கு ஆதரவாக களமிறங்கிய வருண் நிரூப்புக்கு எதிராக விளையாட்டை திருப்பினார். 

akshara reddy angry activity dice task biggbossstamil5

எனினும் இறுதியில் இந்த விஷயம் குறித்த பேச்சுவார்த்தையில் சிபி, தவறுதலான வார்த்தைகளை பயன்படுத்தியதை அடுத்து, அக்‌ஷரா டென்ஷன் ஆகிவிட்டார். அப்போது கையில் இருந்த பொம்மையை ஓங்கி அடித்துவிட்டார். அப்போது அருகில் இருந்த கபோர்டையும் ஓங்கி குத்தினார். 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

akshara reddy angry activity dice task biggbossstamil5

People looking for online information on Akshara angry, Akshara priyanka fight, Akshara raju fight, BiggBossTamil5, Vijay tv will find this news story useful.