www.garudabazaar.com

3 வருடம் கழித்து கார் ரேஸில் களமிறங்கும் இளம் தமிழ் ஹீரோ! இணையத்தை அதிரவைக்கும் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஜெய் திரைத்துறையில் பல வளரும் இயக்குநர்களின் சாய்ஸாக வலம் வரும் இளம் நடிகர். எந்தவொரு கனமான கதாபாத்திரத்தையும் தனக்கே உரிய உடல்மொழியால் எளிமையாக கையாளும் ஜெய், தளபதி விஜய் நடித்த பகவதி படத்தில், நடிகராக அறிமுகமானார்.

Actor Jai makes comeback racing after 3 yrs trending mass pics

இதனிடையே லெண்டி ஸ்டூடியோஸ் சார்பில் S.ஐஸ்வர்யா தயாரிக்கும் புதிய திரைப்படமான சிவசிவா படத்தில் ஜெய் ஹீரோவாக நடிப்பதுடன், அப்படத்துக்கு இசையமைக்கவும் செய்துள்ளார்.  இயக்குநர் சுசீந்திரன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். M.காசி விஸ்வநாதன் படத்தை தொகுத்துள்ளார்.

இந்த படம், ஜெய்யின் 30-வது படம். அதே சமயம் இயக்குனர் சுசீந்திரன் மற்றும் ஜெய் இணையும் முதல் திரைப்படம் இது. சிவசிவா படத்திற்கான பாடல்களை வைரமுத்து, யுகபாரதி மற்றும் ஏகாதசி எழுத, ஷோபி பவுல்ராஜ் நடனப் பணிகளையும், தினேஷ் காசி சண்டை பயிற்சிகளையும் மேற்கொள்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னதாக கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டார்.

இந்நிலையில் நடிகர் ஜெய், 3 ஆண்டுகளுக்கு பிறகு கார் ரேஸில் களமிறங்குகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை அதிரவைக்கின்றன. திரைத்துறையில் நடிகர் அஜீத்குமார், நிஜ வாழ்க்கையில் ரேஸ்களில் பங்கேற்பதில் ஆர்வம் உடையவர். இதேபோல் நடிகர் ஜெய்க்கும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது இருக்கும் தீராத ஆர்வம் மற்றும் அதீத காதல், பல ஆண்டுகளாக அனைவரும் அறிந்ததே. நடிகர் ஜெய் தொடர்ந்து கார் சேகரிப்பில் ஈடுபட்டு வருவதும்,  மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அவரது மிகுதியான ஆர்வமும், தொடர்ந்து செய்திகளில் காண முடிந்தது.

இப்படி, கார் ரேஸில் அவ்வப்போது பங்கேற்று வரும் நடிகர் ஜெய், தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு MRF மற்றும் JA மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் ஃபார்முலா ஃபோர் பந்தயத்தில்  பங்கேற்க உள்ளார். மூன்று நாட்கள் போட்டியாக இந்த பந்தயம் நடைபெறுகிறது. இப்போட்டியில் ஜெய்யுடைய கார் எண்.6.

இந்த ரேஸ் பந்தய  போட்டிகள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10, 2021) தொடங்கி, சனிக்கிழமை (டிசம்பர் 11, 2021) தகுதிச் சுற்று, என சென்று ரேஸ் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 12, 2021) அன்று நடைபெற்றது. வழக்கமாக, இந்தியா முழுவதும் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் டெல்லி ஆகிய மூன்று தடங்களில் மட்டுமே போட்டிகள் நடக்கும்.

இந்த ஆண்டு, போட்டி சென்னை மைதானத்தில் (MMRT - Madras Motor Racing Track) நடக்க இருப்பதால், சென்னைவாசிகள் ஒரு புல்லரிக்கும் அனுபவத்தை பெற்றுள்ளனர்.  இப்போட்டியில் நடிகர் ஜெய்க்கு, ‘எண்ணித் துணிக’ திரைப்பட குழு ஸ்பான்சர் செய்துள்ளனர்.

வழக்கமாக அவருக்கு வருண் மணியன் Radiance Reality நிறுவனம் ஸ்பான்சர் செய்து வருகிறது. திரை வல்லுநர்கள் திரைத்துறையுடன் மட்டும் நிற்காமல் ஜெய் மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு ஸ்பான்சர் செய்வதும் மோட்டார் ஸ்போர்ட்ஸ்  மீது ஆர்வம் காட்டுவதும், மிகவும் அழகான தருணமாக இருக்கிறது.

2021-ஆம் ஆண்டு நடிகர் ஜெய்க்கு மிக முக்கியமான வருடமாக அமைந்துள்ளது, ஏனெனில் அவர் நடித்து வரும் திரைப்படங்கள், அவரின் நடிப்பில் திருப்புமுனையை தரும் வகையில் நேர்மறையான பாராட்டுகளையும், வரவேற்பையும் குவித்துள்ளது. மேலும் இந்த வருடத்தில், அவர் திரைத்துறையில் இசையமைப்பாளாராக அறிமுகமாகும் செய்தியும், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்போது அவரது ரேஸ் வீரர் அவதாரம், அவருக்கு மற்றொரு மகுடமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Jai makes comeback racing after 3 yrs trending mass pics

People looking for online information on Actor jai car race, Car race, Jai, Siva sivaa, Trending, Valimai will find this news story useful.