www.garudabazaar.com

அதிர்ந்த பாவனி! ஒரே ஒரு முத்தம்.. ஓவர் நைட்டில் ட்ரெண்ட் ஆன அமீர்! மருத்துவ முத்தம் பார்ட் 2-ஆ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசனில் பாவனிக்கு அமீர் கொடுத்த முத்தம் டிரென்ட் ஆகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்களுள் ஒரு முக்கிய போட்டியாளராக இணைந்தார் பாவனி. பின்னர் பிக்பாஸ் வீட்டில் அனைவரும் தத்தம் கதைகளை கூறியபோது, பாவனியின் கதையை கேட்டு பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் ரசிகர்கள் பலரும் கண் கலங்கினர்.

amir kissed pavani in biggboss maruthuva mutham trending

இளம் வயதிலேயே கணவரை இழந்து விட்ட பாவனி, விஜய் டிவி சீரியல்கள் உள்ளிட்டவற்றில் நடித்து வந்தார். இந்த நிலையில் பிக்பாஸில் இணைந்த பாவனியிடம் அபினய் மிகவும் அக்கறை காட்டுவதாக ராஜூ, சிபி என அனைவரும் தத்தம் பார்வைகளை முன்வைத்தனர். இதில்பாவனியிடம் அபினய் மிகவும் அக்கறை காட்டுவதாக  அமீர் நேரடியகவே பாவனியிடம் இதுகுறித்த தம் பார்வையை முன்வைத்தார். அதன் பின்னர் பாவனியும் தனக்கே அபினய் தன்னிடம் அவ்வாறு இருக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுந்ததாக கூறினார்.

amir kissed pavani in biggboss maruthuva mutham trending

எனினும் முதலிலிருந்தே அபினய், பாவனி தொடங்கி பலரிடமும் நேரடியாக இதை மறுத்தார். மேலும் தான் அனைவருடனும், தன்னுடைய இதே இயல்புடன் இருப்பதாகவே அபினய் தெரிவித்திருந்தார். இதில், ,பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்தவர் பிரபல விஜய் டிவி கோரியோகிராஃபர் அமீர்.

amir kissed pavani in biggboss maruthuva mutham trending

ஊட்டியை சேர்ந்த இவருடைய கதைதான் அண்மையில் இணையதளங்களில் வைரலானது. அதன்படி 16 வயதில் தன்னுடைய தாயாரை இழந்த அமீர் ஒரு வயதில் தந்தையையும் இழந்து இருந்ததால், இளமை காலங்களில் மிகவும் சிரமப்பட்டு வளர்ந்திருக்கிறார். கழிவறை வசதி கூட இல்லாத வீட்டில், சௌகரியங்கள் இல்லாமல் வீட்டுக்குள் அடைந்து கிடந்ததாகவும், அவர் என்ன ஆவர் என்று அவருக்கே தெரியாமல் இருந்ததாகவும் அமீரின் நண்பர் ஒருவர் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டதை அடுத்து, அமீர் பற்றி பலரும் பேசத் தொடங்கினார்.

amir kissed pavani in biggboss maruthuva mutham trending

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் பாவனியிடம் அவ்வப்போது பேசி வந்த அமீர் பாவனியிடம் நேரடியாகவே அவரை தனக்கு பிடித்திருக்கிறது என்று கூறினார். இந்தநிலையில் பாவனி, தைரியம் இருந்தால் சொல்லு என்று ஒரு பேச்சுக்கு சொன்னால் இப்படி சொல்லி விடுவீர்களா? என்று முதலில் கடிந்து கொண்டார். எனினும் பாவனைக்கு கோபப்படவில்லை. அதேசமயம் பாவனி, உடனடியாக அமீரின் புரொபோசலுக்கு ‘நோ’ என தெரிவித்திருந்தார். 

amir kissed pavani in biggboss maruthuva mutham trending

ஆனாலும் பாவனி பின்னால் சுற்றி வந்த அமீர் தன்னுடைய அன்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். இந்தநிலையில் ஒரு விஷயம் சொல்வதாக அமீர் பாவனியை அழைக்க, அவருக்கு அருகில் இருந்த படுக்கையில் அமர்ந்து கொண்டிருந்த பாவனி,   “என்ன கேட்கப் போகிறீர்கள் என் வாழ்க்கையவா?” என்று சொல்லி, சிரித்துக்கொண்டே அமீரின் அருகே வர, பாவனியின் காதில் ஏதோ சொல்வது போல் வந்த அமீர் முத்தம் கொடுத்துவிட்டார்.

amir kissed pavani in biggboss maruthuva mutham trending

இந்த விவகாரம் தான் கடந்த இரண்டு நாட்களாக ஹாட் டாப்பிக்காக இருந்து கொண்டிருக்கிறது. பிக்பாஸ் முதல் சீசனில் மருத்துவ முத்தம் என்கிற வார்த்தை பிரபலமானது. இந்த வார்த்தையுடன் தொடர்புபடுத்தி தற்போது இந்த விவகாரம் ட்ரெண்டாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

amir kissed pavani in biggboss maruthuva mutham trending

People looking for online information on Amir kissed pavani, Amir kissing pavani, Amir pavani kiss, Amir pavani kissing, Biggboss 5 tamil, Biggboss kiss pavani amir, Biggboss5tamil, Star vijay, Vijay Television, Vijay tv will find this news story useful.