விஜய்யின் மாஸ்டர் ஆடியோ லான்ச் ஸ்பீச்... I am waiting சொல்லும் மலையாள ஸ்டார்!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய்யின் மாஸ்டர் ஆடியோ லான்ச்சுக்கு காத்திருப்பதாக மலையாள ஸ்டார் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் விஜய். இவர் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. தமிழில் மட்டுமன்றி கேரளாவில் பெரும் ரசிகர் பட்டாளத்தை விஜய் வைத்துள்ளார். நலத்திட்ட உதவிகள் செய்வது, பிரத்யேக சிறப்பு காட்சிகள் நடத்துவது என கேரளா ரசிகர்கள் விஜய்க்காக செய்வது அனைத்தும் வைரல் ஹிட் அடித்து வந்தது.
இந்நிலையில் கேரள நடிகர் ஒருவர் மாஸ்டர் ஆடியோ லான்ச்சுக்காக காத்திருப்பதாக ட்விட்டியுள்ளார். மலையாளத்தில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வரும் அஜு வர்கீஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் விஜய்யின் பேச்சை கேட்க காத்திருக்கிறேன்.. தளபதி' என அவர் பதிவிட்டுள்ளார். வருமான வரித்துறை சோதனை முடிந்துள்ள நிலையில், ட்விட்டரில் பலரும் மாஸ்டர் ஆடியோ லான்ச்சை எதிர்ப்பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Waiting for the #Master audio launch speech Thalapathy 🔥 pic.twitter.com/YBPfnyOsQi
— Aju Varghese (@AjuVarghesee) February 7, 2020