Yaanai

ரசிகரின் பிறந்தநாள்.. தொலைபேசியில் அழைத்து வாழ்த்திய அஜித்! செம்ம வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், தனது ரசிகர் ஒருவரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்தியுள்ள வீடியோ வெளியாகி உள்ளது.

Ajith kumar wishes his srilankan fan birthday from UK

Also Read | நடிகை மீனா கணவரின் இறுதி சடங்கு.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! வீடியோ

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

வலிமை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றுகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைந்துள்ளார்.

Ajith kumar wishes his srilankan fan birthday from UK

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார்.

AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Ajith kumar wishes his srilankan fan birthday from UK

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித், ரசிகர் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள வீடியோ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

இலவன் என்ற அந்த அஜித் ரசிகர் இலங்கையை சார்ந்தவர். 

இலவனின் நண்பர் ஒருத்தர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அந்த இங்கிலாந்துவாசி "Lavan உங்க தீவிரமான ரசிகன்" என நடிகர் அஜித்திடம் கூறியுள்ளார். 

Ajith kumar wishes his srilankan fan birthday from UK

உடனே இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு இலவனுக்கு Advance Birthday Wish சொல்லியுள்ளார் நடிகர் அஜித்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை இலவன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

Also Read | அருண் விஜய்யின் 'யானை' படத்தின் ஆக்ரோஷமான SPECIAL கிளிம்ப்ஸ்.. அனல் பறக்கும் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith kumar wishes his srilankan fan birthday from UK

People looking for online information on Ajith Kumar, Ajith kumar Fans, Ajith kumar wishes his srilankan fans birthday, Ajithkumar in UK will find this news story useful.