Yaanai

“எளிமை…. Inspiration…” பில்கேட்ஸை சந்தித்த பிரபல நடிகர் மகேஷ் பாபு…. வைரல் Tweet

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸை சந்தித்துள்ளார்.

Mahesh babu met billgates viral tweet

Also Read | பாரிஸில் உள்ள பிரபல 3D அனிமேஷன் ஸ்டுடியோவில் ராஜமௌலி… லேட்டஸ்ட் viral புகைப்படம்

மகேஷ் பாபு

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு. அவர் நடித்த பல படங்கள் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவை. தமிழில் விஜய் நடித்த கில்லி மற்றும் போக்கிரி படங்கள் மகேஷ் பாபு நடித்த திரைப்படங்களின் ரீமேக்குகள்தான். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்த ஸ்பைடர் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நேரடியாக உருவானது. இதனால் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமான நடிகாராக உள்ளார்.

Mahesh babu met billgates viral tweet

சர்காரு வாரிபாட்டா

சமீபத்தில் அவரின் சர்காரு வாரிபாட்டா திரைப்படம் ரிலீசானது. மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான சர்காரு வாரிபாட்டா படத்தை பரசுராம் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் சங்கராந்திக்கு வெளியாவதாக இருந்த நிலையில், தள்ளிவைக்கப்பட்டு கடந்த மே மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். தமன் மகேஷ் பாபு கூட்டணியில் ஏற்கனவே உருவான படங்களின் வெற்றியால் இந்த படத்துக்கு எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு நிலவியது. படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து மகேஷ் பாபு நடிக்கும் அடுத்த படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Mahesh babu met billgates viral tweet

பில்கேட்ஸுடன் சந்திப்பு

இந்நிலையில் தற்போது மகேஷ் உலகப் பணக்காரர்களில் ஒருவரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனருமான பில்கேட்ஸை சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் இது சம்மந்தமான அவரின் டிவீட்டில் “ பில்கேட்ஸை சந்திக்கும் மகிழ்ச்சியான வாய்ப்பு கிட்டியது. இதுவரை உலகம் பார்த்த மிகச்சிறந்த தொலைநோக்கு சிந்தனையாளர்களில் ஒருவர். ஆனாலும் மிகவும் எளிமையான மனிதர். உண்மையில் மிகச்சிறந்த உத்வேகம்” எனக் கூறி சிலாகித்துள்ளார்.

Also Read | ‘தமிழ் படம்’ அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’… வெளியான சூப்பர் அப்டேட்

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mahesh babu met billgates viral tweet

People looking for online information on பில் கேட்ஸ், மகேஷ் பாபு, BillGates, Mahesh Babu, Mahesh babu met Billgates will find this news story useful.