Pattamboochi

3 கோடி ரூபாய் அதிவேக சொகுசு காரில் நடிகர் அஜித்.. பிரிட்டனில் மாஸ் காட்டும் AK! சூப்பர் COOL PHOTOS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐரோப்பாவில் நடிகர் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Ajith Kumar with McLaren 2018 720S Car in UK England

அஜித் தனது திரைப்பட படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று. அது போல் தனது BMW  பைக்கை எடுத்துக்கொண்டு தல அஜித் ஐரோப்பாவில் பயணம் மேற்கொள்கிறார். 

Ajith Kumar with McLaren 2018 720S Car in UK England

பைக் பயணத்திற்கு நடுவே அஜித், இங்கிலாந்தில் உள்ள மெக்லாரன் கார் ஷோரூமுக்கு சென்று அங்குள்ள கார்களை பார்வையிட்டுள்ளார். மெக்லாரன் நிறுவனம் பார்முலா கார் பந்தயங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனம் ஆகும். 

Ajith Kumar with McLaren 2018 720S Car in UK England

நடிகர் அஜித், மெக்லாரன் 2018 720S காரின் அருகில் நிற்கும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இந்த கார் இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய் ஆகும். அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் டிவிட்டரில் இந்த புகைப்படங்களை வெளியிட்டார்.

Ajith Kumar with McLaren 2018 720S Car in UK England

ஐரோப்பா நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் தற்போது நடந்து வருகிறது.Schengen விசாவுக்கு உட்பட்ட 26 ஐரோப்பிய நாடுகளில் இந்த பைக் பயணம் நிகழ்கிறது.

வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது. AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar with McLaren 2018 720S Car in UK England

People looking for online information on 2018 McLaren 720S, Ajith Kumar, AK, AK61, AK62, McLaren will find this news story useful.