Yaanai

அருண் விஜய்யின் 'யானை' படத்தின் ஆக்ரோஷமான SPECIAL கிளிம்ப்ஸ்.. அனல் பறக்கும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய் நடிக்கும் 'யானை' படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

Arun Vijay Hari Yaanai Movie Glimpse Video Released

Also Read | நடிகை மீனா கணவரின் இறுதி சடங்கு.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! வீடியோ

யானை, அருண் விஜய் நடிக்கும் 33வது படமாகும்.  இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் செப்டம்பர் 9ஆம் தேதி விநாயகர் சதூர்த்திக்கு வெளியானது. மேலும் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள், முன்னோட்டம் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.

நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன்  இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Arun Vijay Hari Yaanai Movie Glimpse Video Released

யானை படம் வரும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் பட ரிலீசை முன்னிட்டு 'யானை' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. பரபர சண்டைக்காட்சிகளுடன் மாஸ் வசனமும் இடம்பெற்றுள்ளது.

யானை படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை KKR சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.  இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் கைப்பற்றி உள்ளது. ZEE5 OTT & ZEE தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த படம் வரும் நாட்களில் ஒளிபரப்பாகும்.

யானை படம் சென்சார் போர்டால் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. யானை படம் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | “எளிமை…. Inspiration…” பில்கேட்ஸை சந்தித்த பிரபல நடிகர் மகேஷ் பாபு…. வைரல் Tweet

 

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay Hari Yaanai Movie Glimpse Video Released

People looking for online information on Arun Vijay, Priya Bhavani Shankar, Yaanai movie, Yaanai movie Release Updates will find this news story useful.