www.garudabazaar.com
iTechUS

"அண்ணனுடன் உடற்பயிற்சி" .. பிரபுதேவாவுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெச்ச Viral பேரு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் & இயக்குனர் பிரபு தேவா உடன் உடற்பயிற்சி செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Aishwarya Rajinikanth workout with Actor Prabhu Deva

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும் தமிழ் சினிமாவின் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை  இயக்க உள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாயாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Aishwarya Rajinikanth workout with Actor Prabhu Deva

Images are subject to © copyright to their respective owners.

சிலநாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். பின்னர் அதே நாளில் கடப்பா மாவட்டத்தில் உள்ள அமீன் பீர் தர்ஹாவிற்கு சென்று இசையமைப்பாளர் ரஹ்மான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இறை வழிபாடு செய்தனர்.

அதேபோல் சமீபத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபுதேவா உடன் உடற்பயிற்சி செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "ரப்பர் மேன் பிரபுதேவா அண்ணாவுடன் இரவு ஷட்டில் ஆட்டத்துக்கு பிந்தைய சில ராப் ஸ்டைல் உடற்பயிற்சி!" என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார். ரப்பர் மேன் என பிரபு தேவாவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajinikanth workout with Actor Prabhu Deva

People looking for online information on Aishwarya Rajinikanth, Prabhu Deva will find this news story useful.