www.garudabazaar.com
iTechUS

நிகழ்ச்சி நடுவே திடீர்ன்னு எந்திரிச்சு விலகிய மணி😅.. "அதுவும் Bigg Boss பத்தி கேள்வி கேட்டதுக்கா?"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் பிக் பாஸ் சீசன் 6 முடிவடைந்த நிலையில் இதன் போட்டியாளர்கள் அனைவரும் தற்போது வெளியில் எங்கே சென்றாலும் மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Manikanta get from seat after question about bigg boss

இதற்கு மிக முக்கிய காரணம், போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த 21 பேரும் மிகச் சிறப்பாக மக்கள் மத்தியில் பெயர் பெற்றது தான். ஒவ்வொரு போட்டியார்களும் ஒவ்வொரு தனித்திறனுடன் விளங்கியதால் அவர்கள் அனைவரும் பலரின் ஃபேவரைட் ஆகவும் மாறி இருந்தனர்.

இதன் காரணமாக தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து இத்தனை நாட்கள் ஆகியும் அவர்கள் எங்கு சென்றாலும் தொடர்ந்து மக்கள் அவர்களுக்கு வேற லெவலில் வரவேற்பையும் அளித்து வருகின்றனர்.

முன்னதாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலேவிற்கு அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய மூன்று பேர் முன்னேறி இருந்தனர். இறுதியில் அசிம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட, இரண்டாவது இடத்தை விக்ரமனும் மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அசிம், சமீபத்தில் Behindwoods நடத்திய "மக்களுடன் அசிம்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் தனலட்சுமி, மணிகண்டா மற்றும் அசல் கோலார் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசிமுடன் கலந்து கொண்ட சக போட்டியாளர்களும் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அப்போது மணிகண்டா, அசிம் மற்றும் அசல் கோலார் ஆகியோர் ஒன்றாக அமர்ந்திருக்க, அவர்களிடம் பொதுவாக சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், உங்களில் Least ஃபேவரைட் போட்டியாளர் யார் என்ற கேள்வியை நெறியாளர் சோபனா முன்வைத்திருந்தார்.

இந்த கேள்வியை அவர் கேட்டு முடிப்பதற்கு முன்பாகவே மணிகண்டா இருக்கையில் இருந்து எழுந்து பதில் அளிக்காமல் வேடிக்கையாக விலகிச் செல்வது போல சென்றிருந்தார். உடனடியாக அனைவரும் சிரிக்க தொடங்க தனது கேள்வியை சற்று மாற்றி கேட்ட ஷோபனா, "இன்னும் கொஞ்சம் ஒழுங்கா ஆடி இருக்கலாமே அப்படின்னு நினைக்கிற போட்டியாளர் யார்?" என்றார்.

அப்போது பேசிய அசிம், "ஓப்பனா கேளுங்க, யாரை பிடிக்காதுன்னே கேளுங்க" என கூறவே, அதனை மணிகண்டாவிடம் கேட்ட நிலையில் அவர் மீண்டும் வேடிக்கையாக அங்கிருந்து எழுந்து செல்ல அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் சிரிக்கவும் தொடங்கினர். பதில் சொல்லாமல் விலக மணிகண்டன் முற்பட்ட நிலையில் மீண்டும் வந்து உட்கார்ந்து "அசிம்" என தெரிவித்தார்.

இதன் பின்னர் பேசிய அசிம், "கடைசியா புடிச்சவனுக்கே உயிர குடுக்குறியே, அப்ப முதல்ல புடிச்ச ஆளுக்கு எவ்வளவு கொடுப்பே?. நீங்க எப்படி பால் போட்டாலும் நாங்க அடிப்போம் டி" என்றும் அசிம் கேட்டார். பிடிக்காத போட்டியாளர் பெயர் சொல்ல மணிகண்டா தயங்கிய நிலையில், அவரை அசிம் கேள்வி கேட்டு மடக்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி நடுவே திடீர்ன்னு எந்திரிச்சு விலகிய மணி😅.. "அதுவும் BIGG BOSS பத்தி கேள்வி கேட்டதுக்கா?" வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Manikanta get from seat after question about bigg boss

People looking for online information on Azeem, Bigg boss, Manikanta will find this news story useful.