‘தல 60’ இயக்குநர் இவரா? - 2020-ல் அஜித் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் காத்திருக்கு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை தொடர்ந்து, அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

After Nerkonda Paarvai, H vinoth to direct Ajith's next film Thala 60 with Boney kapoor

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார்.  ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உருவாகியுள்ளது. 

இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட்.10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

இதனிடையே, அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 60’ திரைப்படத்தையும் தானே தயாரிக்கப்போவதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். இந்நிலையில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் திரைப்படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்ற கேள்வி தல ரசிகர்களிடம் எழுந்துள்ள நிலையில், அது குறித்த தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

அஜித் நடிக்கவிருக்கும் ‘தல 60’ திரைப்படத்தையும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கவிருப்பதாக தெரிகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல்.10ம் தேதி ரிலீசாகும் என்று ஏற்கனவே தயாரிப்பு தரப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஆண்டில் ஹெச்.வினோத்-அஜித் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்திருப்பது தல ரசிகர்களிடையே, ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் அஜித்தின் 60வது திரைப்படம் மீதான எதிர்ப்பார்ப்பையும் எகிர வைத்துள்ளது.