தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடனமாடும் பிரபல பாலிவுட் நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கான இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். 

Actress Kalki Koechlin to Dance in Thala Ajith's Nerkonda Paarvai

மேலும், ஷரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக்  ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குநர் வினோத் இயக்குகிறார்.

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து படக்குழுவினர் சென்னை திரும்பியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு பாலிவுட் நடிகை நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  பிரபல பாலிவுட்  நடிகை கல்கி கோச்சலின் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடவிருக்கிறாராம்.