தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் நடிப்பு குறித்து பிரபல இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், சில காட்சிகளை பார்த்த மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித்திற்காக பாலிவுட்டில் 3 ஆக்ஷன் கதைகள் இருப்பதாகவும், அவர் ஒப்புக் கொண்டால் அதில் ஒன்றை தயாரிக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
தயாரிப்பாளர் போனி கபூரின் இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்துள்ள இயக்குநர் ஆதிக், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் நடிப்பு மிரட்டலாகவும், நேர்த்தியாகவும் இருப்பதாக கூறி, காத்திருக்க முடியவில்லை என ட்வீட் செய்திருந்தார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ஆதிக் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆக.10ம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
😍😍#ThalaAjith Sir on beast mode🔥Total intense🔥can’t wait ❤️ #NerkondaPaarvai https://t.co/xZFygH1ZE1
— Adhik Ravichandran (@Adhikravi) April 10, 2019