நடிகர் அஜித்குமார் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் போட்டிருக்கும் டாட்டூ சீக்ரெட் குறித்து நம்மிடையே பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

போனி கபூர் இயக்கத்தில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது திரைப்படங்கள் குறித்தும், தனது டாட்டூ பற்றிய சுவாரஸ்யங்களை Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் பகிர்ந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், நடிப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும், ஹீரோக்களுடன் சேர்ந்து சுவிட்ஸர்லாந்தில் டூயட் பாடி ஆட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது நடக்கும் வரை என்னை ஒரு நடிகையாக நான் கருத மாட்டேன் என கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடிக்க தான் தகுதி பெற்றது எப்படி என்பது குறித்து பகிர்ந்துக் கொண்டதுடன், சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘ஜெர்சி’ படத்திற்கு கிடைத்துள்ள பாராட்டுக்கள் குறித்தும், 'விக்ரம் வேதா’, ‘ஜெர்சி’ போன்ற தான் நடித்த படங்கள் பிளாக் பஸ்டர் படங்கள் எனும்போது செம கெத்தாக இருப்பதாக கூறினார்.
இறுதியாக தனது தோளில் போட்டிருக்கும் டாட்டூவின் ரகசியம் சொன்ன ஷ்ரத்தா, கல்லூரி படிக்கும்போது மியூசிக் ஆல்பங்களில் பாடும் பழக்கம் உண்டு. அப்படி பாடி தான் பெற்ற முதல் சம்பளத்தை அர்த்தமுள்ளதாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எனக்கு மிகவும் பிடித்த பிரபல ஆல்பமான ‘பீட்டல்ஸ்’ லோகோவை டாட்டூவாக போட்டுக் கொண்டதாக கூறினார்.
அருள்நிதியுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்து நடித்துள்ள சஸ்பன்ஸ் த்ரில்லர் படமான ‘K13’ வரும் மே.3ம் தேதி ரிலீசாகவுள்ளது.
தல அஜித் பட நடிகையின் டாட்டூ சீக்ரெட் இது தான்..! வீடியோ