ஆக்‌ஷன் ஸ்கிரிப்ட் ரெடி - தல அஜித்தை பாலிவுட்டிற்கு அழைக்கும் பிரபல தயாரிப்பாளர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்தை பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

Nerkonda Paarvai Producer Boney Kapoor invites Thala Ajith to act in Bollywood Action film

மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார்.  ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இப்படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சுஜித், அஸ்வின் ராவ்,டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், சில காட்சிகளை பார்த்த மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் போனி கபூர் ட்வீட் செய்துள்ளார்.அவரது ட்வீட்டில், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். மகிழ்ச்சியாக உள்ளது. அஜித்தின் நடிப்பு அற்புதம். விரைவில் ஹிந்தி படத்தில் நடிக்க அஜித் ஒப்புக் கொள்வார் என நம்புகிறேன். 3 ஆக்‌ஷன் கதைகள் உள்ளன, ஏதேனும் ஒன்றுக்கு அவர் சம்மதம் தெரிவிப்பார் என எதிர்ப்பார்க்கிறேன் என்று ட்வீட்டியுள்ளார்.