எம்.ஆர்.ராதாவாக சிம்பு..? எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி..? புதிய படம் பற்றிய தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுந்தர்.சி இயக்கத்தில் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்துக்கு பிறகு, வெங்கட் பிரபுவின் 'மாநாடு' உள்ளிட்ட படங்களில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

STR as MR Radha and Arvind Swamy as MGR new film Produced by Radhika

அதன் ஒரு பகுதியாக தற்போது சிம்புவின் புதிய படம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தில் சிம்பவுடன் அரவிந்த்சாமியும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதா வேடத்தில்  சிம்புவும்,  எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமியும் நடிக்கவிருக்கிறார்களாம்.  இந்த படத்தை நடிகையும் எம்.ஆர்.ராதாவின் மகளுமான ராதிகா தயாரிக்கவிருக்கிறாராம். மேலும் இந்த படத்தை எம்.ஆர்.ராதாவின் பேரனும், ஜீவா வைத்து 'சங்கிலி புங்கிலி கதவத் தொற' படத்தின் இயக்குநருமான ஐக் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  மணிரத்னம் இயக்கிய 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் சிம்புவும், அரவிந்த்சாமியும் இணைந்து நடித்திருந்தனர். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.