கிரிக்கெட் வீரராக நானி - ரசிகர்களை வியக்க வைக்கும் வேற லெவல் ‘ஜெர்ஸி’ டிரைலர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் நானி நடிப்பில் தமிழ்-தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள ‘ஜெர்ஸி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Nani and Shraddha Srinath's sports drama Jersey movie trailer is out

சித்தாரா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கவுதம் தின்னானுரி இயக்கியுள்ளார். கிரிக்கெட் வீரராக நடிக்கும் நானிக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.

இப்படத்தில் பிரம்மாஜி, சுப்பாராஜு, சத்யராஜ், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளானர். ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியாகியுள்ளது.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வரும் ஏப்.19ம் தேதி வெளியாகவுள்ளது. நானி நடிப்பில் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

கிரிக்கெட் வீரராக நானி - ரசிகர்களை வியக்க வைக்கும் வேற லெவல் ‘ஜெர்ஸி’ டிரைலர் வீடியோ