ஜெர்சிக்கு பின் நானியின் அடுத்தப் படத்தில் டபுள் ஹீரோயின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘ஜெர்சி’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் நானி நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Natural Star Nani announced his 25th film, Nivetha Thomas and Aditi Rao plays lead

தெலுங்கு சினிமாவின் ‘நேச்சுரல் ஸ்டார்’ என்றழைக்கப்படும் நடிகர் நானியின் 25வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு இயக்குநர் மோகன கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான ‘அஷ்ட சம்மா’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நானி.

நடிகராக தன்னை அறிமுகம் செய்த இயக்குநர் மோகன கிருஷ்ண இந்திரகாந்தி இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் நானி நடிக்கவிருக்கிறார். இப்படம் நானிக்கு 25வது திரைப்படமாகும். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கவிருக்கும் இப்படத்திற்கு ‘வி’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் நானியுடன், சுதீர் பாபு, நடிகைகள் நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஹிதாரி உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தில் சர்ப்ரைஸான கேரக்டரில்  நானி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைக்கும்  இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.